
16.10.2022
கோவை: அவிநாசி அருகே சில தினங்களுக்கு முன்பு காணாமல்போனதாக தேடப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல் சடலமாக மீட்கப்பட்டது. அம்மாபாளையத்தில் உள்ள பாறைக்குழியில் இருந்து மாணவி காயத்திரி(14)யின் சடலம் மீட்கப்பட்டது. சிறுமியின் தந்தை அனுப்பர்பாளையம் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் இன்று காயத்திரின் உடல் மீட்கப்பட்டது.
சென்னை வந்த தங்கக் கடத்தல்காரர் சுங்க சோதனையில் இருந்து தப்ப உதவிய ஏர் இந்தியா ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். துபாயில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவர் தங்கத்தைக் கடத்த ஏர் இந்தியா ஊழியர் உதவியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் தங்கப்பசை இருந்த கைப்பை சிக்கியது.
ஈரோடு: கனமழை காரணமாக அந்தியூர் குருநாதசாமி வனக்கோயிலில், 10 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி பர்கூர் மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு சரி செய்யப்பட்டதை அடுத்து 18 மணி நேரத்திற்கு பிறகு தமிழ்நாடு – கர்நாடகா இடையே போக்குவரத்து தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்படுவதாகவும், தொடர்ந்து இதுகுறித்து கரையோர பகுதிகளில் வசிக்கும் 15 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை கிராஸ் கட் வீதியில் தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால்,இன்று மாலை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.
தேனி மாவட்டம் கூடலூரில் யானை தந்தம் பதுக்கிய 7 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்த்துள்ளது. ஒருவர் தலைமறைவாக உள்ளார்
நீலகிரி முதுமலை, மசினகுடி வாழைத்தோட்டத்தில்
ஆடு மேய்க்க சென்றவர் காட்டு யானை தாக்கி பலி.
நெல்லை மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் அஜய் என்பவர் நடத்தும் உணவகத்தில்
மறந்து சென்ற ரூ.50 ஆயிரம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு.
சிவகங்கை மானாமதுரை சிப்காட் பெரிய கண்மாயில் உள்ள மடைகள் பழுதடைந்து மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து வீணாகி வருவதால் மடையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்