இரவு 9 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

 

 

 

🔷🔶கன்னியாகுமரியில் பருவமழை தாக்கம் எதிரொலி; ரப்பர் பால் வடிக்கும் தொழில் முடங்கியது: செங்கல் உற்பத்தியும் பாதிப்பு. தொழிலாளர்கள் வேதனை

 

🔷🔶தேனி மாவட்டம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை; நிரம்பியது சண்முகா நதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

 

🔷🔶அரியலூர்

டெல்டாவில் காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு: 650 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது: அரியலூர் அருகே மதகு உடைந்தது

 

🔷🔶மதுரையில் 3 உயர் மதிப்பு பழங்கால கலைப்பொருட்கள் பறிமுதல்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி

 

🔷🔶கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை ஒட்டி புது ஆடைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்.   பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல்

 

🔷🔶ஈரோடு சத்தியமங்கலம் – மைசூர் நெடுஞ்சாலையில் சோதனைச்சாவடியில் கரும்புகளை ருசி பார்த்த காட்டு யானைகள்: வன ஊழியர்கள், வாகன ஓட்டிகள் அச்சம்

 

🔷🔶தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில்  கனமழை பெய்தது. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

 

🔷🔶திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில்  கனமழை பெய்தது

 

🔷🔶வேலூர்

ஆற்காடு சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்பு; முடிவுக்கு வராத போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

 

🔷🔶இராமநாதபுரம்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரம்-கீழக்கரை பாலப்பணி மீண்டும் துவக்கம்: விரைந்து முடிக்க தீவிரம்

 

🔷🔶மதுரை மேலூர் சந்தையில் ரூ.3 கோடிக்கு கால்நடைகள் விற்பனை: தீபாவளியை முன்னிட்டு வியபாரம் விறுவிறுப்பு.

 

🔷🔶சென்னை ஆலந்தூரில் பரபரப்பு: மாடி படிக்கட்டு இடிந்து விழுந்தது: அறையில் சிக்கிய 2 பேர் மீட்பு

 

🔷🔶தூத்துக்குடி மாவட்டம்

மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது – 2 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

 

🔷🔶தூத்துக்குடி மாவட்டம்

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது.

 

🔷🔶தர்மபுரியில் இடி மின்னலுடன் கனமழை 50 ஆண்டுக்கு பிறகு கல்லாற்றில் வெள்ளம்: கால்நடைகள், மின் மோட்டார்கள் அடித்துச் செல்லப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *