–
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (21.03.2023) தமிழ்நாடு வனத்துறை மற்றும் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் உலக காடுகள் தினம்-2023 -ஐ முன்னிட்டு, இயற்கையின் வாழ்விடங்களில் வனவிலங்கு என்ற தலைப்புகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 32 பள்ளி மாணவ மாணவிகளுக்கு துணை இயக்குநர் (புலிகள் காப்பகம்) திரு.ஹ.திலீப்குமார்.,இ.வ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். வீ.ப.ஜெயசீலன்பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
மார்ச் 21-ம் தேதியான இன்று உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. காடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது. காலநிலையை சீராக வைத்துக்கொள்வதில் காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இது தவிர, மனிதனுக்கும் விலங்குகளுக்கும் முன்னொரு காலத்தில் காடுகள் தாம் புகலிடம். நாளடைவில் நாகரிகம் வளரத்தொடங்கியவுடன் மனிதன் காட்டை அழித்து நிலங்களைப் பிரித்துக்கொண்டான். ஆனால் இன்னும் காடுகள் வன விலங்குகளுக்குப் புகலிடமாகவே விளங்குகிறது. அதேபோல மனிதன் வாழ்வதற்குத் தேவையான காற்றினைக் கொடுப்பதில் காடுகளின் பங்கு மிக அதிகம். இந்தக் காடுகள் தாம் மனித இனத்தின் வரம். மனிதன் வாழ இன்றியமையாத தண்ணீரை மழை மூலமாகவும், மண் அரிப்பினைத் தடுப்பது மூலமாகவும், பழங்களை உணவாகக் கொடுத்தும் மனிதனுக்குப் பல வழிகளில் காடுகள் உதவியாக இருந்துவருகின்றன.
மேலும், பூச்சிகள் அனைத்தையும் அழித்து விட்டாலும் உலகில் மனிதன் வாழவே முடியாது. இந்த உலகமானது மனிதர்களுக்கானது மட்டுமே கிடையாது என்றும், உலகத்தில் மனிதர்கள், விலங்குகள், பூச்சிகள் என அனைத்து உயிர்களும் வாழ்கின்றன. காடுகளானது நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியாவது இருக்க வேண்டும்.
அதைபோல், இந்தியாவில் காற்று மாசுப்பாட்டினால் நுரையீரல் அதிகமாக பாதிப்பு அடைகிறது. அதனால் புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு மருந்துகளே இல்லை எனவும், அதனால் நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இது ஒன்று மட்டுமே இதற்குண்டான தீர்வு ஆகும்.
அதன்படி, ஆண்டு தோறும் மார்ச் மாதம் 21-ந்தேதி காடுகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இந்த நாளின் கருப்பொருள் வனங்கள் மற்றும் ஆரோக்கியம். வனங்கள் இல்லையென்றால் நாம் ஆரோக்கியத்துடன் வாழ முடியாது என்பதை நாம் மீண்டும் உணர வேண்டும் என்பதே இந்தாண்டின் கருப்பொருள் ஆகும்.
அதனடிப்படையில், இன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற உலக காடுகள் தினம்-2023 தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், உதவி வன பாதுகாவலர், வன சர அலுவலர்கள், அரசுஅலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இயற்கையின் வாழ்விடங்களில் வனவிலங்கு என்ற தலைப்புகளில் நடைபெற்றது:
