சென்னை: அதிமுக நான்கு அணிகளாக பிரிந்தாலும் உக்கிர மோதல் என்பது இபிஎஸ், ஓபிஎஸ் கோஷ்டிகளுக்கு இடையேதான். அதிமுக தலைமை அலுவலகம், போஸ்டர் யுத்தம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என நீடித்த இந்த இரு கோஷ்டிகளுக்கு இடையேயான யுத்தம் இன்று தமிழ்நாடு சட்டசபையில் பகிரங்கமாகவே வெடித்தது. அதிமுகவில் யாருக்கு அதிகாரம்? என்கிற அதிகாரப் போட்டி ஓபிஎஸ், இபிஎஸ் இடையே இருந்து வருகிறது. ஓபிஎஸ்ஸைப் பொறுத்தவரை சட்டப்படி ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை; ஆகவே தமக்கே கட்சியில் அதிகாரம் உள்ளது என போராடுகிறார். ஆனால் இபிஎஸ் தரப்போ, ஒட்டுமொத்த கட்சியும் பொதுக்குழுவும் எங்கள் வசம் இருக்கிறது. இப்போதைக்கு இடைக்கால பொதுச்செயலாளர்.. இனி நிரந்தர பொதுச்செயலாளர் என ரேஸில் முந்திச் செல்கிறது.இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றன. பின்னர் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை இரு கோஷ்டிகளும் தட்டின. உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பில், இபிஎஸ் கூட்டிய ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. ஆனால் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் மீது வழக்கு தொடரலாம் என அனுமதித்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பும் அளிக்க இருக்கிறது. அண்ணாமலையை மட்டும்தான் எதிர்க்கிறார் – கே.சி. பழனிசாமி , முன்னாள் எம்.பி. இந்த நிலையில் அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் கோஷ்டி மோதல் தமிழ்நாடு சட்டசபையிலும் இன்று வெடித்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக சட்டசபை குழு தலைவர்- எதிர்க்கட்சித் தலைவராக இபிஎஸ் இருந்து வருகிறார். துணைத் தலைவராக ஓபிஎஸ் இருந்தார். ஆனால் ஓபிஎஸ், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஆர்பி உதயகுமார் நியமிக்கப்பட்டார் என சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதம் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டசபையில் இபிஎஸ் அருகேதான் ஓபிஎஸ் பாராமுகமாகவே அமர்ந்திருக்கிறார். அதிமுக எம்.எல்.ஏக்களுடன்தான் ஓபிஎஸ் கோஷ்டி மனோஜ் பாண்டியனும் அமர்ந்திருக்கிறார். முக்கியமான விவாதங்களில் இபிஎஸ், ஓபிஎஸ் இவருமே பேசி வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீது இன்று இபிஎஸ் பேசினார். அதன்பின்னர் ஓபிஎஸ் பேசினார். அவ்வளவுதான் இபிஎஸ் கொந்தளித்துவிட்டார். அதெப்படி பெரும்பான்மை உறுப்பினர்கள் அடிப்படையில் அதிமுகவில் ஒருவரைத்தானே பேச அனுமதிக்க வேண்டும் என்றார். ஆனால் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் முதல்வர் என்ற முறையில் ஓபிஎஸ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்றார். அப்போது மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக முழக்கமிட அதிமுக எம்.எல்.ஏக்கள் அவருடன் மல்லுக்கட்டினர். அப்போது கேபி முனுசாமி குறுக்கிட்டு சமாதானப்படுத்தினார். சபாநாயகர் அப்பாவுவின் விளக்கத்தி ஏற்க மறுத்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்தும் வெளிநடப்பு செய்தனர்.இனிவரும் நாட்களிலு9ம் சட்டசபையிலும் அதிமுக இபிஎஸ், கோஷ்டிகள் யுத்தம் தொடரும் என்பதற்கான முன்னோட்டமே இன்றைய சர்ச்சையும் வெளிநடப்பும் எனவும் கூறப்படுகிறது. நீதிமன்றங்களில் இரு கோஷ்டிகளின் பஞ்சாயத்து முடிவுக்கு வந்தாலும் சட்டசபையில் அங்கீகாரம் பெறுவதில் இரு அணிகளும் தொடர்ந்து முட்டி மோதவே போகிறது என்பதையே இன்றைய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. சட்டமன்றத்தில் பேசியதற்கு இபிஎஸ் தரப்பு எதிர்ப்பு..வந்து விழுந்த கேள்வி-ஒரு வரியில் பதிலளித்த ஓபிஎஸ்
இபிஎஸ், ஓபிஎஸ் கோஷ்டிகளுக்கு இடையேதான் மோதல்.
