சென்னை: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர காலம் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்க உள்ள நிலையில் பங்குனி மாத வெயில் சுட்டெரித்து வருகிறது. பல ஊர்களில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக மாலை நேரங்களில் கோடை மழை இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்துள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு கோடை மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாடு முழுவதுமே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கத்திற்கு அஞ்சியே மக்கள் வெளியில் தலைகாட்டாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி உள்ளது. ஈரோட்டில் 102 டிகிரி பாரன்ஹீட்டும், மதுரை விமான நிலையம் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, மதுரை நகரம், வேலூர், நாமக்கல், திருப்பத்தூரில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. Recommended Video தென் பகுதிகளில் அதிமுகவின் தோல்விக்கு OPS காரணமாக இருப்பார் – ப்ரியன், பத்திரிகையாளர் அடுத்த 5 நாட்களுக்கு ஹேப்பிதான்.. தமிழகத்திற்கு காத்திருக்கும் மழை! கிளைமேட் எப்படி இருக்கும் கோடை மழை வெயிலின் தாக்கத்திற்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து ஆறுதலையும் தருகிறது. தமிழ்நாட்டில் மார்ச் 1 முதல் நேற்று வரை கோடை மழை 15 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் மார்ச் 20 வரை வழக்கமாக 14.5 மி.மீ. கோடை மழை பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு 16.7 மி.மீ. பெய்துள்ளது. சென்னையில் கோடை மழை சென்னையில் மார்ச் 1 முதல் 20ம் தேதி வரை கோடை மழை கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் வழக்கமாக 3.2 மி.மீ. மழை பெய்யும் நிலையில் தற்போது 56.1 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் மார்ச் 1 முதல் 20 வரை வழக்கமான 5 மி.மீ.க்கு பதில் தற்போது 39.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கொட்டித்தீர்த்த மழை மதுரையில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று பிற்பகலில் கோடை மழை பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்தது. இதனிடையே இன்று முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 00:00 / 02:30 சென்னையில் வெயில் சுடும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று முதல் 4 நாட்களுக்கு கோடை மழை நீடிக்கும்
