“இந்து மதத்துக்கு எதிரானது அல்ல காங்கிரஸ். இந்து மதத்தை குறை கூறுவதும், சிறுமைப்படுத்துவதும் நேருவின் பழக்கம் என்றும் வடமாநிலங்களில் சமீபகாலமாக ஒரு கருத்து வளர்ந்து வருகிறது. அது உண்மையல்ல. நேருவுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர் ஒரு சீர்திருத்தவாதி. ஆனால், இந்து மதத்திற்கு எதிராக அவர் செயல்பட்டது இல்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி கூறினார்.