இந்தியாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,151 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,000-த்தை தாண்டியது. இந்தியாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,151 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஹப்பாடா.. திமுகவிற்கு பறந்த குட்நியூஸ்.. மொத்தமாக புல் ஸ்டாப் வைத்த திருமா! விக்கித்து போன எடப்பாடி? கடந்த திங்கள்கிழமையன்று 24 மணிநேரத்திலான கொரோனா பாதிப்பு, 1805 ஆக பதிவாகி இருந்தது. நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1573 ஆக பதிவாகி இருந்தது.  காலையுடனான 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,000-த்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,151 ஆக பதிவாகி உள்ளது. கடந்த 5 மாதங்களுக்குப் பின் மிக அதிகமான ஒருநாள் கொரோனா பாதிப்பு இது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையும் 11,000-த்தை தாண்டியுள்ளது. நாட்டின் கொரோனா நிலவரம்: பாக்யாவிற்கு டாஸ்க் கொடுத்த ராதிகா.. தோள் கொடுத்து பழனிச்சாமி செய்யும் செயல்… கடுப்பாகும் கோபி நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.20 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 11,336 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. Ads by இந்தியாவில் தற்போது 11,903 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.03 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.78 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 1,222 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,66,925 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 2,151 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.51% வாராந்திர பாதிப்பு விகிதம் 1.53%. இதுவரை மொத்தம் 92.13 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,42,497 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *