இந்தியன் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்
த.மனோ தங்கராஜ்  முன்னிலையில், தமிழ்நாடு அரசுத்
துறைகளின் இ – சேவைக்கான இணைய வழி கட்டணத்தை இலகுவாக செலுத்திட,
இந்தியன் வங்கியின் கட்டணத் திரட்டு செயலியை பயன்படுத்த, தமிழ்நாடு மின் ஆளுமை
முகமை மற்றும் இந்தியன் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுறுத்தலின்படி, அனைவருக்கும் எளிதான,
வெளிப்படையான மற்றும் விரைவான சேவைகளை வழங்குவது அரசின் முன்னுரிமை
என்றும், இதனை அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளும் பணியினை தகவல்
தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையில் ஒப்படைத்துள்ளார்.
தற்போது அரசுத் துறைகள் மின்-ஆளுமை சேவைக் கட்டணத்தை பொது மக்கள்
மற்றும் வணிகர்களிடமிருந்து பெறுவதற்காக பல்வேறு கட்டண நுழைவு வாயில்களை
பயன்படுத்தி வருகின்றன. இதற்கான வர்த்தக பேச்சுவார்த்தை மற்றும் தொழில்நுட்ப
ஒருங்கிணைப்புக்காக பெரும் நேரம் மற்றும் முயற்சி செலவிடப்படுகிறது.
தற்போது, ​​தமிழ்நாடு அரசு, பல்வேறு துறைகளின் அனைத்து வகையான கட்டண
வசூல்களுக்கும் கட்டணத் திரட்டு செயலி சேவை வழங்குநர்களை  ஆய்வுசெய்து
பட்டியலிட்டு குழுவில் சேர்த்து வருகிறது.
இச்செயலி அனைத்து வகையான டெபிட் / கிரெடிட் கார்டுகள், யுபிஐ (UPI),
பேமென்ட் பெட்டகம்ற்றும் இணைய வங்கி (Internet Banking) கட்டணங்களை
வசூலிக்கவும், சேகரிக்கவும், ஒத்திசைவு செய்யவும் எளிதான ஒருங்கிணைந்த கட்டண
இயங்கமைவு ஆகும். இது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மற்றும் அரசுத்
துறைகளின் கட்டண செலுத்து முறைகளுக்கு எளிதான அமைப்பு ஆகும்.
இந்தியன் வங்கி இந்த சேவையை, சந்தை விலையைவிட குறைவாக, “உபயோகிப்பு
அளவு” அடிப்படையில் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை
மற்றும் இந்தியன் வங்கியுடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அனைத்து

அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் இந்த சேவையை
கால தாமதமின்றியும் பணவிரயமின்றியும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றுதமிழ்நாடு மின் ஆளுமை முகமை
அலுவலகத்தில், தமிழ் நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்
துறையின்  அமைச்சர்த.மனோ தங்கராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்ஜெ.குமரகுருபரன்செயலாளர், தகவல்
தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை,. பிரவீன் பி. நாயர் இ.ஆ.ப,
முதன்மை நிர்வாக அலுவலர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, மகேஷ் குமார்
பஜாஜ், நிர்வாக இயக்குனர் இந்தியன் வங்கி,  தீபக் சர்தா, தலைமை பொது மேலாளர் /
தலைமை தொழில்நுட்ப அதிகாரி,. கந்தா ராஜேஸ்வர ரெட்டி, கள பொது மேலாளர்,
இந்தியன் வங்கி, அன்புகாமராஜ்.பி, மண்டல மேலாளர், இந்தியன் வங்கி (சென்னை-
தெற்கு சாந்தி எஸ்.கே, துணைப் பொது மேலாளர் டிஜிட்டல் வங்கி, இந்தியன்
வங்கி மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, இந்தியன் வங்கி உயர் அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *