லண்டன்: இங்கிலாந்து நாட்டின் துணை பிரதமரான டொமினிக் ராப் அரசு அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாக, நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கையை மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி நேற்று முன்தினம் பிரதமர் ரிஷி சுனக்கிடம் சமர்ப்பித்தார். இந்நிலையில் துணை பிரதமர் டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்வதாக டிவிட்டரில் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா
