ஆல்ஃபிரட் நோபல்
இன்று பிறந்த நாள்.
🏆 நோபல் பரிசினை உருவாக்கிய ஆல்ஃபிரட் நோபல் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி சுவீடனில் பிறந்தார். இவர் 1857ஆம் ஆண்டு எரிவாயு மீட்டர் குறித்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றார். மேலும் வெடிப்பொருட்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு, 1863ஆம் ஆண்டு வெடி மருந்தைக் கண்டுபிடித்தார்.
🏆 பல முயற்சிகளுக்குப் பிறகு டைனமைட்டையும், சேஃப்டி பவுடரையும் 1867ஆம் ஆண்டு இவர் கண்டுபிடித்தார். 1875ஆம் ஆண்டு பிளாஸ்டிக் ஜெலட்டினைக் கண்டுபிடித்தார். சிறிய ஆயுதங்களுக்கு தேவைப்படும் புகை வெளியிடாத பாலிஸ்டைட் வகை கன் பவுடரையும் கண்டுபிடித்தார்.
🏆 இவர் போஃபர்ஸ் என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்திற்கு உரிமையாளரானார். இவரது நினைவாக நோபலியம் என்று ஒரு தனிமத்துக்கு பெயரிடப்பட்டது. இவர்
சர்வதேச அளவில் சுமார் 350 காப்புரிமைகளைப் பெற்றார்.
🏆 உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளை, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட காரணமாக இருந்த ஆல்ஃபிரெட் நோபல் 1896ஆம் ஆண்டு மறைந்தார்.