ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு சரத்குமார் ஆதரவு.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் உடனடி அமலுக்கு வந்திருப்பதற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும் நடிகருமான  ரா.சரத்குமார் வரவேற்பு தெரிவித்தித்துள்ளார்.

சூதாட்ட தடை சட்டத்தடையை வரவேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல்’ மசோதா கடந்த 24 – ந்தேதி தமிழக சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு சட்டம் அமலுக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்திய அரசியலமைப்பின் 7 – வது அட்டவணையின் கீழ் பட்டியலிடப்பட்டிருக்கும் பந்தயம், சூதாட்டம் விவகாரங்களில் மாநில அரசுக்கு இருக்கும் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, தடைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும், நீதிமன்றங்கள் ஏற்கெனவே ஆன்லைன் ரம்மியை அறிவுப்பூர்வமான விளையாட்டு என பதிவு செய்துள்ளதை கவனத்தில் கொண்டு சட்டச்சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் தடை என்றபோதிலும் பிற மாநிலங்களின் பெயர்களில் பதிவு செய்து ஆன்லைன் சூதாட்ட விளையாடும் சாத்தியக்கூறுகள் இருப்பதை சிந்தித்து, இந்தியா முழுவதும் பந்தயம் வைத்து, பணம் செலுத்தி விளையாடும் அனைத்துவித ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்வதற்கு மாநில அரசும், மத்திய அரசும் முயற்சிக்க வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆன்லைன் ரம்மி விளம்பர படத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தது சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *