ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் 1989,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995 மற்றும்
திருத்த விதிகள் 2016, விதி 16 மற்றும் திருத்த விதிகள் 2018-இன்படி, மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தலைவராக கொண்டு மாண்புமிகு நிதித்துறை
அமைச்சர், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், மாண்புமிகு
தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு
சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோருடன் மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும்
கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள
மாநிலங்களவை / மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் 19.08.2021
அன்று முதல் கூட்டம் மற்றும் இரண்டாவது கூட்டம் 12.04.2022 அன்று
நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அதன் அடுத்த கூட்டம் 11.04.2023 அன்று மாலை 5.30
மணியளவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள
10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு
மற்றும் அவை பற்றிய விவரங்கள், இந்தச் சட்டத்தின்கீழ் வழக்குகள் தொடுத்தல்,
சட்டத்தைச் செயற்படுத்தும் பல்வேறு அலுவலர்களின் / அமைப்புகளின் பங்கு, பணி
மற்றும் மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) திருத்தச் சட்டம் 2015-இல்
அத்தியாயம் IV-A–இல் உள்ள பிரிவுக் கூறு 15A(11)–இன்படி வன்கொடுமையால்
பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் ஆகியவை குறித்து இந்த கண்காணிப்புக் குழு
கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *