ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு
கல்வி உதவித் தொகை விண்ணப்பித்தல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-2023ம் ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு
முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய
கிறித்துவ ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
வழங்குவதற்கு மாணாக்கர்களின் வங்கி கணக்கு எண் ஆதார் எண்ணுடன் இணைத்துக்
கொள்வது கட்டாயமாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் 12,146 மாணாக்கர்களின் வங்கி
கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அம்மாணாக்கர்கள் தங்களது வங்கி கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்க
தெரிவிக்கப்படுகிறது. மேலும் கணக்கு எண் நடப்பிலுள்ளதை உறுதி செய்ய
கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதிய மாணாக்கர்கள் அஞ்சலகத்தில் வங்கி கணக்கு எண்
(IPPB Bank) துவங்க முதன்மை கல்வி அலுவலர் மண்டல அஞ்சலக முதுநிலை மேலாளர்
/அஞ்சல் ஊழியர்களின் மூலமாக பள்ளிகளில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இதனை அனைத்து மாணாக்கர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு