ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் 7500 பணிக் காலியிடங்களுக்கான
SSC – CGL Tier-I எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கான எழுத்து தேர்வானது 14.07.2023 முதல் 27.07.2023 வரை
நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 27 வயது வரை விண்ணப்பம்
செய்யலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், இதர
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு. விண்ணப்பக்
கட்டணம் ரூ.100 ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அனைத்து பிரிவு
பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
இணையம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 ஆகும். தேர்வு குறித்து
மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
இத்தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 20.04.2023 அன்று
வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் துவங்கப்படவுள்ளது. மேலும்
இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
எனவே மேற்குறிப்பிட்டுள்ள போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள்
ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள நகலுடன் தங்களது வேலைவாய்ப்பு அடையாள
அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தூத்துக்குடி மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக
வேலைநாட்களில் நேரடியாக தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து
பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் .கி.செந்தில்ராஜ்,தெரிவித்துள்ளார்.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் SSC – CGL தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள்
