இன்றைக்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் அதிகம் கலகலவென பேசக்கூடியவர் துரைமுருகன், சட்டென யாரையும் கலாய்த்துவிடும் துரைமுருகன் பேசிய ஒரு வார்த்தை அவரையே பதம் பார்த்து. தக் லைப் செய்தவரையே தக் லைப் செய்திருக்கிறார்கள் சிலர். சட்டசபையில் எல்லா உறுப்பினர்களும் சீரியஸாக பேசிக்கொண்டிருக்கும் போது,எதையாவது பேசிய சட்டென சிரிக்க வைத்துவிடுவார் துரைமுருகன்,சில சாம்பிள்ளை இங்கே பார்ப்போம், நேற்று சட்டசபையில் மிகவும் தீவிரமாக சாப்பாடு, அரிசி தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது துரைமுருகன் இப்போது 1 மணி ஆகிறது. அனைவருக்கும் பசிக்கின்ற நேரம், இப்போதுவா உப்புமா பற்றி பேசுகிறீர்கள் என்று கேட்டு அனைவரையும் சிரிக்க வைத்தார்.இதேபோல் அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி பேசும் போது, எங்கள் உறுப்பினர் பேசும்போது, அடுத்த உறுப்பினருக்கு இடையில் பேச வாய்ப்பு தருகிறீர்கள். அப்போது, அரிசி பற்றி பேசும்போது, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச வாய்ப்பு கேட்டார். அப்போது, வாய்ப்பு வழங்கவில்லை. பாரபட்சமாக நடந்து கொள்கிறீர்கள் என்றார். அப்போது துரைமுருகன் எப்போதுமே முன்வரிசை உறுப்பினர்களுக்கு முன்னுரிமை உண்டு என்றார். அந்த நேரத்தில் கடைசி வரிசையில் இருந்த அ.தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜூ, 2-வது வரிசையில் வந்து அமர்ந்தார்.இதை பார்த்த துரைமுருகன்:- இங்கு வந்து அமர்ந்தாலும் பேச வாய்ப்பு தர முடியாது என்றார். இதனால் அவையில் உள்ள அனைவரும் சிரித்தனர்.இது நேற்று மட்டும் நடந்த இரண்டு சம்பவம் ஆகும். எதிர்க்கட்சியில் இருந்தாலும், ஆளும் கட்சியில் இருந்தாலும், யார் எங்கு இருந்தாலும் யோசிக்கமாட்டார். சீரியஸாக இருப்பவர்களை கூட கவலை மறந்து சிரிக்க வைத்துவிடுவார் துரைமுருகன். அப்படிப்பட்டவர் கடந்த 29-ந்் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசும்போது, ”என்னை புதைக்கும் சமாதியில், கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என, ஒரு வரி எழுதினால் போதும்… என்று உருக்கமாக தெரிவித்தார். இதை பார்த்த சிலர் அமைச்சர் துரைமுருகன் புகைப்படத்தை ஒரு கல்லறையில் உள்ளது போன்று சித்தரித்து சில சர்ச்சைக்குரிய வாசகங்களையும் குறிப்பிட்டு, அதனுடன் ஆடியோவை இணைத்து வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டார்கள்.இது தொடர்பாக காட்பாடி வடக்கு பகுதி தி.மு.க. செயலாளர் வன்னியராஜா காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அவர் தனது புகாரில், துரைமுருகன் குறித்து வதந்தி பரப்பி பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்படி கோரியிருந்தார். அதன்படியே காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்கள்.இந்நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பொள்ளாச்சி அருண்குமார் என்பவரை பிடித்து காட்பாடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அமைச்சர் துரைமுருகன் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிறக்கம் செய்து, தவறாக சித்தரித்து ஆடியோவை இணைத்து வீடியோவாக பதிவேற்றம் செய்தது தான்தான் என அருண்குமார் ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அமைச்சர் துரைமுருகன் பற்றி தவறான பதிவேற்றங்களை பேஸ்புக் பக்கங்களில் இருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காட்பாடி போலீசார் கூறினார்கள்.
அமைச்சர் துரைமுருகனையே கலங்க வைத்த அதிமுக நிர்வாகி .
