அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு பேச்சு அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் :
தேசிய முன்னேற்ற கழகம்
நிறுவன தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில்:
மார்ச் 24-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்ணியக்குறைவாக அவதூறாக பேசியிருப்பதை தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்து கொண்டு, மூன்றாம் தரை மேடை பேச்சாளர் போல அண்ணாமலை பேசுவது தமிழக அரசியல் வேக்காட்டு தனத்தை காட்டுகிறது. மாநில தலைவர் என்ற பதவிக்கே தகுதியில்லாத நபர் என்பதை அண்ணாமலை அடிக்கடி அவரது திமிர் பேச்சால் காட்டி வருகிறார்.
தன்னை நேர்மையான காவல்துறை அதிகாரி என சொல்லி கொள்ளும் அண்ணாமலைக்கு முதலில் பொதுதளங்களில் எப்படி பேச வேண்டுமென அவர் சார்ந்த தேசிய கட்சி சொல்லி தர வேண்டுமென தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை டெல்லி மேலிட தலைவர்கள் மாற்ற முடிவு செய்துவிட்டதை தெரிந்து கொண்டு இப்படி அநாகரீகமாக பேசி வரும் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சுக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படி அண்ணாமலை மன்னிப்பு கேட்க தவறினால் அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.