அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் ஒப்புதல் சிபிஎம் போராட்ட அறிவிப்பு வெற்றி

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் ஒப்புதல்
சிபிஎம் போராட்ட அறிவிப்பு வெற்ற- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கறம்பக்குடி பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட அக்ரஹாரம், கறம்பக்குடி வடக்குப் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்;ட் கட்சி கிளைகளின் சார்பில் அப்பகுதி மக்களின் பல்வேறு அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக துண்டறிக்கை வெளியிட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் பேரூராட்சி தலைவர் முருகேசன், துணைத் தலைவர் நைனாமுகமது, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலாளர் பி.வீரமுத்து, கிளைச் செயலாளர் ஆர்.கே.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பேச்சுவார்த்தையில் கறம்பக்குடி சிவன்கோவில் குளக்கரையில் உள்ள தேவையற்ற இரண்டு தொட்டிகளையும் அகற்றுவது, அம்பேத்கர் மையம், பெட்ரோல் பங்கிற்கு அருகில்  உள்ள சாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் பணிகளைத் தொடங்குவது, கஜா புயலில் சேதமடைந்த ஈமக்கிரியைத் கொட்டகையை விரைவில் சரிசெய்வது, வரத்துவாரிகளை தூர்வாருவது உள்ளி;ட்ட கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றித் தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *