செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல்விளையாட்டு பல்கலைக் கழகத்தில் 13.03.2023 முதல் 16.03.2023 வரை நடைபெறஉள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் 26 வகையான 2022-23ஆம்ஆண்டிற்கான அகில இந்திய பல்கலைக்கழக தடகளப் போட்டியினை தொடங்கிவைக்கும் விதமாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல்தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள் இன்று(13.03.2023) தொடர் ஜோதியினை ஏற்றி வைத்து போட்டியினைதொடங்கிவைத்து,பல்கலைக்கழகங்களிலிருந்துவருகைபுரிந்தவிளையாட்டுவீரர்,வீராங்கனைகளின்அணிவகுப்பினைப் பார்வையிட்டார்.தடகளப் போட்டியினை தொடங்கி வைத்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் பேசியதாவது-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களும் சர்வதேச அளவில்விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முதன்மை பெற்றிடவேண்டும், தமிழ்நாடுமாணவர்கள், இளைஞர்கள் சாதனை படைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில்நம்பிக்கையில் முழு முயற்சி எடுத்து வருகின்றார்கள்.அதனடிப்படையில் விளையாட்டில் வீரர், வீராங்கனைகளுக்கு அதிக ஆர்வத்தைஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகின்றன.மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சிறந்த தொடர் நடவடிக்கையினால் உலகேவியக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், சென்னை மகளிர் ஓப்பன்டென்னிஸ் ஆகியவை சென்னையில் நடத்தப்பட்டது.மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்அவர்களும் அண்மையில் ஒடிசா மாநிலம் சென்று அங்குள்ள விளையாட்டு
கட்டமைப்புகளை பார்வையிட்டு, அந்த மாநில முதலமைச்சர் மற்றும்விளையாட்டுத்துறை அலுவலர்களை சந்தித்து, விளையாட்டு மேம்பாடு தொடர்பாக இருமாநிலங்களுக்கிடையே ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்அவர்களின் மேலான ஆலோசனையின்படி, முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள்08.02.2023 முதல் 28.02.2023 வரை மாவட்ட அளவில் எவ்வித தொய்வுமின்றிநடத்தப்பட்டு, மாண்புமிகு அமைச்சர் அவர்களே இந்தப் போட்டிகளை சென்னையில்தொடங்கி வைத்தார்.இந்திய – நேபாள மகளிருக்கான நட்பு ரீதியிலான கால்பந்து, மகளிர் ஸ்குவாஷ்
ஆகியவை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது நடைபெற்றவிளையாட்டு பயிற்சியாளர்கள் தேர்வில் தகுதியின் அடிப்படையில் 76 நபர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, பள்ளிகள், கல்லூரிகள்மற்றும் வேலைவாய்ப்புகளில் 3 சதவீத இடஒதுக்கீடு, தேசிய, சர்வதேச அளவில் வெற்றி
பெறுகின்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் சிறந்த விளையாட்டுவீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்குதல் போன்ற அனைத்து திட்டங்களையும் உறுதிசெய்து நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, அகில இந்திய அளவில் 82 பல்கலைக்கழகங்களைச் சார்ந்த1,900 தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் அகில இந்திய பல்கலைக்கழக தடகளப்போட்டி இன்று (13.03.2023) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்காக 890
பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களின் பெற்றோர்களும் வந்துள்ளனர். இந்தப் போட்டிகள்நடைபெறும் இந்த விளையாட்டு பல்கலைக்கழகமானது அனைத்து விளையாட்டு பயிற்சிவசதிகளும் கொண்ட ஆசிய அளவில் சிறந்த முதன்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப.,
தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்முனைவர் மு. சுந்தர், பள்ளிக்கரணை துணை காவல் ஆணையாளர் திரு.கே.ஜோஷ்தங்கையா, காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற டாக்டர்
அகில இந்திய பல்கலைக்கழக தடகளப் போட்டியினை தொடங்கி
