அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு
தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.
சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய
மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்
அவர்கள் 3.4.2023 அன்று காணொலிக் காட்சி வாயிலாக கலந்து
கொண்டு தலைமையுரை ஆற்றவுள்ளார்.
இம்மாநாடு புதுடில்லியில் உள்ள கஸ்தூர்பா காந்தி மார்க், கன்னாட்
பகுதியில் (இந்தியா கேட் அருகில்) மாலை 4.30 முதல் 7.00 மணி வரை
நடைபெறவுள்ளது. மேலும், இம்மாநாட்டில் பல்வேறு
மாநிலங்களிலிருந்து  முதலமைச்சர்கள், முன்னாள்
அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு
கட்சித் தலைவர்கள் ஆகியோர் காணொலிக் காட்சி வாயிலாகவும் கலந்து
கொள்ள உள்ளார்கள்.
சமூக நீதிக்கான போராட்டத்தையும், சமூக நீதி இயக்கத்திற்கான
தேசிய கூட்டு திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக
இம்மாநாடு நடத்தப்படுகிறது.
சமூக நீதி மற்றும் சமூக சீர்திருத்த இயக்கமாக செயல்பட்டதால்
தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வலிமையான அரசியல்
இயக்கம் அவசியம் என்பதை உணர்ந்து பேரறிஞர் அண்ணா அவர்கள்
1949-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.
அன்றிலிருந்து 74 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பொறுப்புள்ள, சமூக
நீதியை காக்கும், திராவிட இனம்-மொழி-கலை-பண்பாடு-நாகரிகம்
ஆகியவற்றின் அருமை பெருமைகளை, பாரம்பரியத்தை வெற்றிகரமாகப்
பாதுகாத்து போற்றி வளர்த்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் பரிணாமம் பெற்று, ஆட்சியைப்
பிடித்து, பேசிய கொள்கைகளை நிறைவேற்றும் சட்டங்களை இயற்றும்
தகுதியை அடைந்தது, இந்திய அரசியல் வரலாற்றில் திராவிட
இயக்கத்துக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய பெருமை. பேரறிஞர்
அண்ணா அவர்களை தொடர்ந்து, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும்
நவீன தமிழ்நாட்டை உருவாக்கிட பல்வேறு சீரிய திட்டங்களை

செயல்படுத்தியதோடு, சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களும்
சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேம்பாடு அடைந்திட
வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை
செயல்படுத்தினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அனைத்து
துறையின் வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக
வளர்ச்சி என்ற பெருமைமிகு திராவிட மாடல் ஆட்சி நடந்து வரும்
இவ்வேளையில் இத்தகைய சமூக நீதிக்கான மாநாடு நடைபெறுவது
சிறப்பிற்குரியது.
சமூகநீதி அளவுகோல் சட்டப்படி முழுமையாகச்
செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாடு
அரசால் சமூகநீதிக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி
உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல்,
முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக்
கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும் பணிகளை
மேற்கொள்வதோடு, இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால்,
உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும் வகையில் அரசு
அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் கொண்டு குழு
அமைக்கப்பட்டுள்ளது.
சமூகம், அரசியல், பொருளாதாரம், மக்கள் மேம்பாடு அனைத்திலும்
நவீனமயம் என்கிற திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாடு அரசு நடத்தி வரும்
நிலையில், சமூக நீதியை தேசிய அளவில் முன்னெடுத்து செல்லும் வகையில்
இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின்
ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பாளர் மாண்பமை ஓய்வு பெற்ற
நீதியரசர் திரு. வி. ஈஸ்வரய்யா அவர்கள் வரவேற்புரை ஆற்றவுள்ளார்.
ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. பி. வில்சன்
அவர்கள் முதன்மை உரையாற்றவுள்ளார்.
இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு ராஜஸ்தான்
மாநில முதலமைச்சர் திரு. அசோக் கெலாட், மாண்புமிகு ஜார்க்கண்ட்
மாநில முதலமைச்சர் திரு. ஹேமந்த் சோரன், மாண்புமிகு பீகார் மாநில
துணை முதலமைச்சர் திரு. தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் திரு. சீதாராம் யெச்சூரி, இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் திரு. டி. ராஜா,
சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தர பிரதேச மாநில எதிர்கட்சித்
தலைவருமான திரு. அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு
கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ஃபரூக்
அப்துல்லா, அகில இந்திய திருணாமுல் காங்கிரஸ் கட்சியின்
மாநிலங்களவை குழுத் தலைவர் திரு. டெரிக் ஓ பிரைன், தேசிய
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மகாராஷ்டிரா
துணை முதலமைச்சருமான திரு. சஜன் சந்திரகாந்த் புஜ்பால், ஆம் ஆத்மி
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சஞ்சய் சிங், பீகார் – ராஷ்டிரிய
ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மனோஜ் குமார் ஜா,
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற
உறுப்பினருமான திரு. இ.டி. முகமது பஷீர், பாரதிய ராஷ்டிர சமிதி
கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டாக்டர் கே. கேசவ ராவ்,
ராஷ்டிரிய சமாஜ்பக்Z தேசிய தலைவரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள்
அமைச்சருமான திரு. மகாதேவ் ஜன்கர், அசாம் நாடாளுமன்ற
உறுப்பினர் திரு. நபா குமார் சாரானியா, ஹரியானா லோக்தந்திர சுரக்õh
கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராஜ்குமார் சயினி
ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா
திரு. கி. வீரமணி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்
செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.வைகோ, விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.
தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும்,
சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவஹிருல்லா,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற
உறுப்பினருமான திரு.ஈ.ஆர். ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சித்
தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. தி. வேல்முருகன்
ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.
மூத்த பத்திரிகையாளர் திரு. திலிப் மண்டல், BAMCEF தேசியத்
தலைவர் டாக்டர் வாமன் மேஷ்ராம், PAGAAM தேசிய அழைப்பாளர்
டாக்டர் பி.என். வாங், இந்திய மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர்
டாக்டர் பி.டி. போர்கார், சம்விதான் பச்சாவோ சங்கர்ஷ் சமிதி
அழைப்பாளர் டாக்டர் அனில் ஜெயிந்த், டெல்லி பல்கலைக்கழகத்தின்
பேராசிரியர்கள் டாக்டர் லஷ்மன் யாதவ், டாக்டர் சுராஜ் மண்டல்,

டாக்டர் ரத்தன் லால், மத்திய பிரதேசம் – பிச்சுடா வர்க் சம்யுக்த் சங்கர்ஷ்
மோர்ச்சா முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு. பகதூர் சிங் லோடி
ஆகியோர் அறிமுக உரையாற்றுவார்கள்.
இம்மாநாட்டில் சமாஜிக் சேட்னா பவுன்டேஷன் நிறுவனரும்,
அலாகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான திரு. வீரேந்திர சிங்
யாதவ் நன்றியுரை ஆற்றவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *