அன்னிய முதலீட்டிடை ஈர்ப்பதில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான இடைவெளி

2021ஆம் ஆண்டு, சீன-அமெரிக்க உறவு பற்றிய செய்திகள் பெரும் கவனத்தை ஈர்த்தன. அவற்றுள் ஜனவரி திங்களில் வெளியான செய்தி ஒன்று அதிகக் கவனத்தை ஈர்த்தது. கடந்த ஆண்டு, புதிய ரக கரோனா வைரஸ் பரவல் தொடங்கிய பிறகு, உலகப் பொருளாதார மையம், கிழக்கு திசைக்கு இடம்பெயர்ந்துள்ளது என்பதே அது. சீனா, அமெரிக்காவைத் தாண்டி, உலகளவில் மிகவும் வரவேற்கத்தக்க முதலீட்டு இடமாக மாறியுள்ளது. இதற்குக் கோவிட் 19 பாதிப்பிலிருந்து சீனா முதலாவதாக விடுபட்டது முக்கியக் காரணம் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் இந்த மாற்றத்திற்குப் பின்னால் கோவிட் – 19 தொற்றை வென்றதையும் தாண்டி இன்னும் ஆழமான காரணங்கள் இருப்பதாக அமெரிக்காவின் ஃபோபர்ஸ் செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.