cheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap jerseyscheap jerseyscheap jerseys
சீன அரசுத் தலைவர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தொலைபேசித் தொடர்பு - Dhinasakthi

சீன அரசுத் தலைவர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தொலைபேசித் தொடர்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் டோமாஸ் பாஹுடன் 25ஆம் நாளிரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றைச் சிறப்பாக நடத்த, சீனா சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் பல்வேறு நாடுகளுடன் சேர்ந்து பாடுபடும் என்று தெரிவித்தார்.

டோமாஸ் பாஹ் கூறுகையில், தலைவர் ஷி ச்சின்பிங்கின் வலுவான தலைமையில், கோவிட்-19 நோய் எதிரான போராட்டத்தில் சீனா சிறந்த சாதனை படைத்துள்ளது. பொருளாதாரத்தை மீட்பதில் சீனா முன்னணியில் உள்ளது. இது உலகப் பொருளாதார மீட்சிக்கு உந்து சக்தியாக மாறும் என்று குறிப்பிட்டார். சீன மக்களுக்கு வசந்த விழா வாழ்த்துத் தெரிவித்த அவர், புதிய ஆண்டில் சீன மக்கள் புதிய சாதனை பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.