cheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap jerseyscheap jerseyscheap jerseys
இந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி - Dhinasakthi

இந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி

இந்தியாவின் 72ஆவது குடியரசு நாளை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 26ஆம் நாள் இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
தன் வாழ்த்து செய்தியில், சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்கு ஒன்று முக்கிய அண்டை நாடுகளாகும். புதிய ரக கரோனா வைரஸ் பரவி, நூறு ஆண்டுகளில் கண்டிராத பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ள பின்னணியில், சீன-இந்திய உறவின் சீரான நிதான வளர்ச்சியை நிலைநிறுத்துவது, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கு பொருந்தியது. இது, பிரதேச மற்றும் உலகின் நிதானத்துக்கும் வளர்ச்சிக்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசுத் தலைவர் கோவிந்துடன் இணைந்து, இரு நாட்டுறவை சரியான பாதையில் முன்னேற்ற விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.