சன்சத் தொலைக்காட்சி: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி,செப்டம்பர்.14

கடந்த பிப்ரவரி மாதத்தில், லோக்சபா தொலைக்காட்சி, ராஜ்யசபா தொலைக்காட்சி ஆகிய இரண்டையும் இணைக்க முடிவெடுக்கப்பட்டது. புதிதாக சன்சத் என்ற தொலைக்காட்சி தொடங்கவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அலுவலர் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், சன்சத் தொலைக்காட்சியை துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நாளை தொடங்கி வைக்கின்றனர்.