• Home
  • Breaking
  • எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங்கிரஸ் புதிய முயற்சி
Breaking இந்தியா

எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங்கிரஸ் புதிய முயற்சி

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது.ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியால் பாராளு மன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிகமான இடங்களில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி 91 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதில் காங்கிரசுக்கு வெறும் 52 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது.

இதனால் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற குறைந்தபட்சம் 55 எம்.பி.க்களை பெற்றிருக்க வேண்டும்.

எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங்கிரஸ் கட்சி புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தங்களுடன் இணைத்தால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது.

இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

ராகுல்காந்தி ராஜினாமா செய்வதில் அடம்பிடிப்பதால் காந்தி குடும்பத்தில் இல்லாத ஒருவர் தலைவர் பதவிக்கு தேடப்பட்டு வருகிறார். இதற்கு ஏற்றவாறு சரத் பவாரின் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டால் அவர் கட்சியின் தலைவராவதுடன் பாராளு மன்றத்திலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும் என்ற யோசனை தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Related posts

30-ந்தேதி பிரதமராக மோடி பதவியேற்கிறார்

admin

உச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

admin

முதல்-அமைச்சர் பழனிசாமியுடன் அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் சந்திப்பு

admin

Leave a Comment