cheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap jerseyscheap jerseyscheap jerseys
வளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’ - Dhinasakthi

வளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’

அமைதி நிலவும காலங்களில் கூட நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாடுபட வேண்டும். அவ்வாறு கூறப்படும் சூழலில் கொந்தளிப்பான சூழல், தொற்றுநோய், பொருளாதாரச் சரிவு, காலநிலை மாற்றம் என பல அறைகூவல் நிகழும் சமகாலத்தில் உலக நாடுகள் மற்றும் மக்களிடையே வலிமையான ஒற்றுமை தேவை. கரோனா வைரஸ் பரவலில் பொது எதிரியாக நாடு-இன பேதமின்றி அச்சுறுத்துவது கண்ணுக்குத் தெரியாத வைரஸ். அதனை எதிர்ப்பதற்கு நம்மிடம் உள்ள வலுவான ஆயுதம் ‘ஒற்றுமை’ என்ற உயர்ந்த தத்துவம் மட்டுமே.
இச்சூழலில், சர்வதேச அளவிலான மேடையில் பல்வேறு நாடுகளின் தலைவர்களின் கருத்துகள் குறிப்பிட்ட நாடுகளின் தலையெழுத்தை மட்டுமல்ல, உலகின் தலையெழுத்தையும் மாற்றக் கூடியவை. தற்போது நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டமான தாவோஸ் கருத்தரங்கில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நெருக்கடி மிகுந்த சூழலில் இருந்து மீள்வதற்கான கருத்துகளை பகர்ந்து வருகின்றனர்.
ஒருதரப்பு வாதத்தைத் தொடர்ச்சியாக எதிர்த்தும், பல தரப்புவாதத்தை வலுவாக ஆதரித்தும் செயல்பட்டு வரும் நாடாக சீனா இருந்து வருகிறது. பல்வேறு சர்வதேச மேடைகளில் சீனத் தலைவர்கள் அதனை மொழிந்து வருகின்றனர். தாவோஸ் கருத்தரங்கில் காணொளி வழியாக சொற்பொழிவு ஆற்றிய ஷிச்சின்பிங், “தொற்றுநோய், பொருளாதார மந்தநிலை ஆகியவற்றுக்குச் சிறந்த தீர்வாகவும், உலகின் எதிர்காலத்துக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காகவும் பலதரப்புவாதம் இருக்கும்,” என்று தெளிவுற எடுத்துரைத்தார்.
குறுகிய மனப்பான்மை, அண்டை நாடு அல்லது கூட்டுறவு நாட்டைப் பாதிக்கும் கொள்கைகள், தன்னை மட்டுமே மையப்படுத்தி செயல்படும் ஒருதரப்புவாத மனநிலை ஆகியவற்றை சர்வதேச சமூகம் தவிர்க்க வேண்டும். கொள்கைகள் என்பவை கண்டிப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டியவை. அவ்வாறுதான் விதிமுறையும். ஒருமுறை விதிகள் உருவாக்கப்பட்டு விட்டால் அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கலாசாரம், பண்பாடு, கொள்கைகள், சமூக அமைப்பு முறைகளைக் கொண்டுள்ளன. ஒரு மரத்தின் இலைகள் எப்படி ஒரே மாதிரி இருக்காதோ அவ்வாறுதான் நாடுகளும். அதேசமயம், எந்தவொரு நாடும் மற்ற நாட்டை விட உயர்வானது. சுழியம்-கூட்டுத்தொகை விளையாட்டு அல்லது வெற்றியாளரே அனைத்தையும் எடுத்துக் கொளல் போன்ற கொள்கைகள் சீன மக்களிடையே ஒருபோதும் இருந்ததில்லை. தனது வலிமையைக் காட்டியோ அல்லது ஆசைவார்த்தை கூறியோ எந்தவொரு நாடும் ஒரு முடிவை எடுக்கக் கூடாது என்று கூறி, உலக நாடுகளின் ஒற்றுமை, பாகுபாடின்மை, திறந்த மனப்பான்மை, பரஸ்பர மதிப்பு, உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றின் மதிப்புகளை எடுத்துக் கூறினார்.
பாண்டுரங்கன், பெய்ஜிங்.