• Home
  • Breaking
  • முதல்-அமைச்சர் பழனிசாமியுடன் அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் சந்திப்பு
Breaking தமிழகம்

முதல்-அமைச்சர் பழனிசாமியுடன் அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் சந்திப்பு

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் தோல்வியடைந்தார். ஆனால், அவர் மீது மதிப்பு வைத்திருந்த ஜெயலலிதா அவரை மாநிலங்களவை எம்பி ஆக்கினார். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பையும் கொடுத்தார்.
இந்த அளவுக்கு முக்கிய நபராக இருந்த அனுபவம் மிக்கவர் வைத்தியலிங்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்பும் அதிமுக உடைந்து மீண்டும் சேர்ந்தபோது ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு அடுத்தபடியாக துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பைப் பெற்றார்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமியுடன் அதிமுக எம்பி வைத்திலிங்கம் சந்தித்து பேசினார். வைத்திலிங்கத்திற்கு மத்திய மந்திரி பதவி கேட்பதாக தகவல் வெளியான நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related posts

நேரம் வரும்போது யார் பிரதமர் வேட்பாளர் என முடிவு செய்வோம்: கோவையில் குஷ்பு

dhinasakthi news

மத்திய மந்திரி கனவு எனக்கு இல்லை- ரவீந்திரநாத் குமார்

admin

ஓய்வுக்கு பின் ஓவியராக விருப்பம் -டோனி

admin

Leave a Comment