அமெரிக்கத் தடுப்பூசிகள் பெரும்பாலான உலகிற்குப் போட வாய்ப்பு குறைவு

கொவைட்-19 நோய்க்கான தடுப்பூசிகளைப் போடும் பணி 9 திங்களுக்கு முன் உலகளவில் தொடங்கிய நிலையில், உலகின் 58 விழுக்காட்டினருக்கு முதல் டோஸ் தடுப்பூசி இன்னும் போடப்பட வில்லை.

அமெரிக்க அக்சிஒஸ் செய்தி நிறுவனம் அண்மையில் தனது இணையத்தளத்தில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், மூலப் பொருட்களின் தட்டுப்பாடு, தயாரிப்புக்கான உயர் உற்பத்தி செலவு உள்ளிட்ட காரணங்களால், அமெரிக்க மருத்துவத் தொழில் நிறுவனங்களும், அரசும், உலகின் பெரும்பாலான மக்களுக்குத் தடுப்பூசி விநியோகிக்க முடியவில்லை. 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் மொடெர்ன தொழில் நிறுவனம் 1 பில்லியன் டோஸ் தடுப்பூசியைத் தயாரிக்கவுள்ளது. அவற்றில் ஒரு டோஸ் கூட, ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பவில்லை. ஆனால், சீனாவின் தடுப்பூசிகள் அங்கே சென்றடைந்தன என்று தெரிவிக்கப்பட்டது.