cheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap jerseyscheap jerseyscheap jerseys
2019ஆம் ஆண்டு நவம்பரில் இத்தாலி பெண் ஒருவருக்கு கரோனா தொற்று : ஆய்வு முடிவு - Dhinasakthi

2019ஆம் ஆண்டு நவம்பரில் இத்தாலி பெண் ஒருவருக்கு கரோனா தொற்று : ஆய்வு முடிவு

இத்தாலி நாட்டின் மிலான் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஒரு பன்னாட்டு ஆய்வுக் குழு நடத்திய ஆய்வின்படி, 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி சேகரிக்கப்பட்ட மாதிரியில் இருந்து புதிய வகை கரோனா வைரஸின் மரபணுத் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாதிரி, தோல் அழயற்சியால் பாதிக்கப்பட்ட 25 வயதான பெண் நோயாளி ஒருவரிடம்இருந்து எடுக்கப்பட்டது என்று இத்தாலிய நாளிதழ் “ல ரிபப்லிகா”இணையதளத்தில் ஜனவரி 11ஆம் நாள் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவே, இத்தாலியில் முதலாவது கரோனா நோயாளி உறுதிசெய்யப்பட்ட தேதியை 2019ஆம் ஆண்டு நவம்பர் திங்களுக்கு முன்னுக்குக் கொண்டு வருகிறது.
தற்போது வரை இத்தாலியில் மிக முன்னதாகவே கண்டறியப்பட்ட கரோனா நோயாளியாக இருந்தது என்று மிலான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனார்.
2020ஆம் ஆண்டு நவம்பர் திங்கள், மிலானிலுள்ள தேசிய நோய்க்கட்டி ஆய்வு நிறுவனம் நோய்க்கட்டி இதழில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், புதிய வகை கரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் இத்தாலியில் பரவச் சாத்தியம் உண்டு என்று கூறப்பட்டுள்து.