cheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap jerseyscheap jerseyscheap jerseys
யாங்சி ஆற்று சுற்றுச்சூழலில் முன்னேற்றம் - Dhinasakthi

யாங்சி ஆற்று சுற்றுச்சூழலில் முன்னேற்றம்

மனித உடலின் பாகங்களுக்கு ரத்தங்களைக் கொண்டு செல்லும் நரம்புகளைப் போல, செழிப்பாகப் பாய்ந்தோடும் ஆறுகள் நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. மாறி வரும் வாழ்க்கை முறை, பெருகி வரும் தொழில்சாலைகள், காலநிலை மாற்றம் ஆகிய அறைகூவல்களில் இருந்து ஆறுகளைக் காப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். சீனாவில் பல ஆறுகள் இருந்தாலும் பல மாநிலங்களை வளமூட்டும் யாங்சி ஆறும் மஞ்சள் ஆறும் மிக முக்கியமானவை.
நாட்டின் பிரதான வளர்ச்சிக்குத் தவிர்க்க முடியாத சக்திகளாக இந்த ஆறுகள் விளங்கினாலும், 11 மாநிலங்கள் மற்றும் நகராட்சிகளைக் கடந்து செல்லும் யாங்சி ஆறு சீனாவின் ஒட்டு மொத்தப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. அதனைப் பாதுகாக்க சீன அரசு தொலைநோக்குத் திட்டங்களை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. யாங்சி ஆற்றுப் பொருளாதார மண்டலம் வளர்ச்சியுடன் ஆறுகளின் இருகரையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டில் மைய அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
2016ஆம் ஆண்டு சொங்சிங் மாநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், தனித்துவமான சுற்றுச்சூழலை யாங்சி ஆறு கொண்டுள்ளதை எடுத்தியம்பினார். அத்துடன், உயிர்ச் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை மீட்டெடுக்கும்போது ஆற்றங்கரையோரம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைக் கொண்டு வர முடியும், அது நீண்ட காலத்துக்கு நீடித்து இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டன. மாசுபாடுகளுக்கு எதிரான பரப்புரை, முக்கியமான துறைகளில் பசுமை வளர்ச்சி ஆகியவற்றுடன் ஆற்றின் கரைகளை நன்கு பாதுகாப்பதற்கான விரிவான திட்டங்கள் வெளியிடப்பட்டன. யாங்சி ஆற்றுப் பாதுகாப்புச் சட்டம் சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிலைக்குழுவால் கடந்த டிசம்பரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 11 மாநிலங்களில் தூய்மைப்படுத்துதல், ஆற்றுநீர் வழியைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்காக சிறப்பு நிபுணர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சீனாவில் ஆற்று நீரின் தரத்தை அளவிடும் விதம் 1 முதல் 5 வரையில் மதிப்பிடப்படுகிறது. யாங்சி ஆறு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் சீரிய திட்டங்களுடன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்குத் தக்க பயன்கள் கிடைத்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில், யாங்சி ஆற்று நீரின் தரம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஆற்று நீரின் மாதிரிகள் தொடர்ச்சியாக சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில், நீரின் தரம் 2016-இல் இருந்த 82.3 விழுக்காட்டிலிருந்து 2019இல் 96.3 விழுக்காடு என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.
பாண்டுரங்கன், பெய்ஜிங்.