இந்தியாவை உலக நாடுகள் புகழ காரணம் மக்களின் முயற்சியே: பிரதமர் மோடி

இந்தியாவை உலக நாடுகள் புகழ காரணம் மக்களின் முயற்சியே: பிரதமர் மோடி

கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்தியாவை உலக நாடுகள் புகழ்ந்து பேச மக்களின் முயற்சியே காரணம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

நாடு முழுவதும் பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதுமுள்ள பஞ்சாயத்து ராஜ் தலைவர்களுடன் இன்று காலை 11 மணியளவில் காணொலி காட்சி வழியே கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து ராஜ் மந்திரி நரேந்திர சிங் தோமரும் கலந்து கொண்டார்.

அவர் பேசும்பொழுது, கிராமங்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்காக சுய சார்புடன் இருக்க வேண்டும் என்பது இப்பொழுது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதற்கு முன் நாம் சந்தித்திராத வகையிலான புதிய சவால்களை கொரோனா வைரஸ் தொற்று நம்முன் கொண்டு வந்துள்ளது. ஆனால், நாம் புதிய விசயங்களை கற்று கொள்ளவும் வழி செய்துள்ளது. கொரோனா நெருக்கடியை இந்தியா எப்படி எதிர்கொள்கிறது? என உலகம் முழுவதும் இன்று பேசப்படுவதற்கு காரணம் மக்களின் முயற்சியே ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் குறைந்த அளவிலான வளங்களே நமக்கு கிடைக்க பெறும் சூழலில், நாட்டின் குடிமகன்கள் கஷ்டங்களுக்கு இரையாகாமல் அதனை சவாலாக எடுத்து கொண்டுள்ளனர். நம் முன் தடைகள் உள்ளன. ஆனால், உறுதியுடன் நாம் முன்னேறி கொண்டிருக்கிறோம். நாட்டை காக்கும் பணி தொடர்கிறது என அவர் கூறினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )