cheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap jerseyscheap jerseyscheap jerseys
சீனத் தடுப்பூசிகள் மீது ஆர்வம் கொள்ளும் வெளிநாடுகள் - Dhinasakthi

சீனத் தடுப்பூசிகள் மீது ஆர்வம் கொள்ளும் வெளிநாடுகள்

புதிய ரக கரோனா வைரஸுக்கு எதிராக கடந்த ஆண்டு தொடங்கிய போராட்டம் இன்னும் நீடித்து வருகிறது. இருள் சூழ்ந்த நீண்ட குகையின் எல்லையில் வெளிச்சம் தெரிவது போல, கரோனா வைரஸ் தடுப்பூசிகளின் வருகை உலகத்துக்கு ஆறுதலை அளித்துள்ளது. தடுப்பூசி கண்டுபிடிப்பு மற்றும் சோதனையில் நேர்மறையான முடிவுகள் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணி சுறுசுறுப்பாகத் தொடங்கியுள்ளன.
தடுப்பூசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் மருத்துவக் கட்டமைப்பு போதிய அளவு இருக்காது. எனவே, இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் அந்நாடுகள் தடுப்பு மருந்து தயாரிப்பில் வலுவாக இருக்கும் நாடுகளிடம் இருந்து தடுப்பூசிகள் வாங்க வேண்டி உள்ளது.
உள்நாட்டுத் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இருப்பினும், பொறுப்புமிகு பெரிய நாடுகள் சிறு சிறு நாடுகளுக்கு உதவுவது, மனிதாபிமான அடிப்படையில், முக்கியம். சீனாவின் சைனோவேக் மற்றும் சைனோஃபார்ம் நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகள் பல்வேறு நாடுகளுக்கு அளித்து, ‘பெரிய நாடு’ என்ற பொறுப்பை சீன அரசு வெளிப்படுத்தி வருகிறது. சீனத் தடுப்பூசிகளுக்கு பஹ்ரைன், எகிப்து, பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்னதாக, பிரேசிலில் சீனத் தடுப்பூசிகளின் பாதுகாப்பு தொடர்பான புரளி பரப்பப்பட்டது. அது பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்ட பிறகு, வதந்திகளுக்கு அந்நாட்டு அரசு முற்றுப்புள்ளி வைத்ததுடன், ‘சீனத் தடுப்பூசிகள் பயன்மிக்கது, பாதுகாப்பானது’ என்று பாராட்டு சன்றளிக்கவும் செய்துள்ளது. தடுப்பூசி தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வத் தகவல்களைத் தவிர, தேவையற்ற புரளிகளை நம்பக் கூடாது என்பதும் இதன்மூலம் தெளிவாகிறது. இந்தோனேசிய அரசுத் தலைவர் ஜோகோ விதோதோ சைனோவேக் தயாரித்த தடுப்பூசியை போட்டுக் கொண்ட நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதேபோல், பெரு நாட்டு அரசுத் தலைவரும் சீனத் தடுப்பூசியை எடுத்துக் கொண்டு நாட்டு மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
மேலும், தாய்லாந்து, உக்ரைன், ஜோர்டான், மலேசியா ஆகிய நாடுகளும் சீனத் தடுப்பூசிகளைப் பெற ஆர்வம் செலுத்தியுள்ளன, அதற்கான ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன. மலேசியாவின் ஃபார்னியேஜ் என்ற மருந்து நிறுவனம் சீனாவின் சைனோவேக் நிறுவனத்திடமிருந்து 1.4 கோடி தடுப்பூசிகள் பெற ஒப்பந்தம் போட்டுள்ளது. ‘மனிதகுல பொது எதிர்கால சமூகம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்கி வரும் சீனா, நோய் பரவிய காலத்தில் நோய் தடுப்புப் பொருள்களை பல்வேறு நாடுகளுக்கு வழங்கிய சீனா, தற்போது தடுப்பூசிகளை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாண்டுரங்கன், பெய்ஜிங்.