ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள் – மாணவச்செல்வங்களுக்கு முதல்அமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை,செப்டம்பர்.15
கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள் என மாணவச்செல்வங்களுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள் என மாணவச்செல்வங்களுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் விடீயோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில் ஸ்டாலின் கூறியிருப்பதன் முக்கிய அம்சங்கள் வருமாறு;-

*நீட் விலக்கு மசோதாவை செயல்படுத்த நிச்சயம் பாடுபடுவோம்; மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
*நீட் மசோதாவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
*மாணவச் செல்வங்களே, மனம்தளராதீர்கள்”
*கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்”
“கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம், நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் எனத்தெரிவித்துள்ளார்.