உலக மனித உரிமைத் துறையில் சீனா புதிய பங்களிப்பு

2021முதல் 2025ஆம் ஆண்டு வரையான தேசிய மனித உரிமைச் செயல்பாட்டுத்
திட்டத்தின் முக்கிய அம்சம் குறித்து சீன அரசவையின் தகவல் தொடர்பு
அலுவலகம் 14ஆம் நாள் விளக்கிக் கூறியுள்ளது. அப்போது இந்த
அலுவலகத்தின் அதிகாரி லீ சியாவ்ஜூன் குறிப்பிடுகையில், சீனாவின் தேசிய
மனித உரிமைச் செயல்பாட்டுத் திட்டம் உலகளவில் முன்மாதிரியாக
விளங்கியுள்ளது. விளங்கியுள்ளது. உலகில் 60க்கும் மேலான நாடுகள் மனித
உரிமைச் செயல் திட்டத்தை வகுத்துள்ளன. இதில் சீனா, இந்தோனேசியா,
மெக்சிகோ ஆகிய நாடுகள் மட்டுமே தொடர்ந்து நான்கு முறையாக
வகுத்துள்ளன. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் முதலிய
நாடுகள் இன்னும் எதுவும் வகுக்கவில்லை.
2021முதல் 2025ஆம் ஆண்டுக்கான சீனாவின் தேசிய மனித உரிமைச்
செயல்பாட்டுத் திட்டம் செப்டம்பர் 9ஆம் நாள் வெளியிடப்பட்டது. மனித
உரிமைகளின் மதிப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றுவதற்கான கடமை
மற்றும் இலக்கு இதில் வகுக்கப்பட்டுள்ளன.