சினிமா

அஜித்தின் அடுத்த பட இயக்குநர்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் – வித்யாபாலன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை’. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தையும் இவரே தயாரிக்க இருக்கிறார். அந்த படத்தையும் எச்.வினோத் இயக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது.
அஜித்துக்காக அரசியல் கலந்த திரில்லர் கதையை வினோத் உருவாக்கியதாகவும், ஆனால் அதில் அரசியல் கதையில் விருப்பம் இல்லாத அஜித் வேறு கதையை தயார் செய்யும்படியாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே எச்.வினோத்துக்கு பதிலாக வேறு ஒரு இயக்குநருடன் அஜித் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை வினோத் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Related posts

விருப்பமில்லாமல் ஒரு வசனம் பேசினேன் – ராதாரவி

admin

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் சிறுத்தை சிவா?

admin

திருவையாறு 14-ஆம் ஆண்டு தொடக்க விழா

dhinasakthi news

Leave a Comment