ஒரே விளையாட்டு அரங்கில் 3 வெப்ப நிலைகள்!

2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தொழில் நுட்பங்களின் பங்களிப்பு அதிகம். எடுத்துக்காட்டாக, ஐஸ் கியூப் என அழைக்கப்படும் விளையாட்டு அரங்கில், “ஒரே அரங்கில் 3 வெப்ப நிலைகள்” கொண்ட சூழல் உருவானது குறிப்பிடத்தக்கது. 4000க்கும் அதிகமான உணர்கருவிகளின் மூலம், விளையாட்டு அரங்கில் வெப்பம், ஈரப்பதம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் தொடர்பான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
கர்லிங் விளையாட்டுக்கான பனிமேடையின் மேற்பரப்பில் பூஜியத்துக்கு கீழ் 8 டிகிரி செல்சியஸ் மற்றும் அதன் 1.5 மீட்டர் மேல் 10 டிகிரி செல்சியஸ் அளவில் கட்டுப்படுத்தப்படும். மேலும், பார்வையாளர்களின் இருக்கைப் பகுதியில் வெப்பம் 16 முதல் 18 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
2008ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்ஜிங்கில் நடைபெற்ற போது, வாட்டர் கியூப் என பெயரிடப்பட்ட இந்த விளையாட்டு அரங்கில் நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இன்று, இது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரலாற்றில் மிக பெரிய கர்லிங் விளையாட்டு அரங்கமாகும்.