25 ஆண்டுகளாக வனப் பகுதியை பாதுகாக்கும் சீனர்

ஹுனான் மாகாணத்தின் சென் சோவ் நகரின் லின் வூ மாவட்டத்தில் சான் ஃபெங்லிங் மலை பகுதியில் உள்ள காடுகளை 25 ஆண்டுகளாக, 63 வயதான தூ யீபியாவ் பாதுகாத்து வருகிறார்.

1996 ஆம் ஆண்டு மலை உச்சியில் உள்ள கண்காணிப்பு நிலையத்தில் வீடு பெயர்ந்தது முதல், மலை பகுதியை பசுமையாக்க மரங்களை நட்டும், தீ விபத்துகளைக் குறைக்கவும் மற்றும் காடுகள் அழித்தலை தடுக்கவும் மலையில் ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகிறார். மேலும், அவர் மலையின் நீர் நிலைகள் மற்றும் உயிரியல் பன்முகத்தன்மையையம் பதிவு செய்து வருகிறார்.

மலையில் நிகழ்ந்தவற்றை பதிவு செய்யது 4,000 க்கும் மேற்பட்ட குறிப்புகளை சேகரித்துளார்.

தூ யீபியாவ் ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 கிலோமீட்டர் தூரம் மலையில் நடந்து செல்கிறார், அதன் விளைவாக ஆண்டு தோறும் அவருக்கு மூன்று ஜோடி காலணிகள் தேய்ந்து நலிந்து போகிறது.

அவர் வேலை தொடங்கிய முதல் வருடத்தில், மலை பகுதியில் எந்த ஒரு வழித்தடமும் இல்லை. மலையில் ஒவ்வொரு முறை நடந்து செல்லும் போது புல்லை வெட்டுவதற்கும், வழித்தடத்தை உருவாக்குவதற்கும் ஒரு வெட்டுக்கத்தியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது என்று மலைப்பாதையின் உருவாக்கம் பற்றி, நினைவு கூர்ந்தார்.

கண்காணிப்பு நிலையத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையினால் சமைப்பது மிகவும் கடினமான விஷயமாகும். உலர் காய்கறிகள், உருளைக்கிழங்கு மற்றும் ஊறுகாய் போன்றவற்றை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தூ யீபியாவ் கூறுகிறார்.

மேலும், “என்னிடம் பேச யாரும் இல்லை” என்று தனிமையின் வலியை பற்றி நமக்கு உணர்த்துகிறார் தூ யீபியாவ்.

வானொலியில் பாடல்களை கேட்டு ரசித்தும், பாடல்களை பாடி ரசித்தும் எனது பொழுதைபோக்குகிறேன்.

“நான் இந்த மலையின் மகன், அதனால் அதைக் நன்றாக கவனித்துக்கொள்வது என் கடமையாகும்” என்று தூ யீபியாவ் கூறுகிறார்.

-அருண் மகாலிங்கம், பெய்ஜிங்.