தமிழ்நாடு

22 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெறுவதையொட்டி 22 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11-ந் தேதி முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகளையும் தமிழக அரசு நியமித்துள்ளது. மேலும் மேற்பார்வையிட 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் நியமித்துள்ளது.

இந்நிலையில், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறுவதையொட்டி 22 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

கீழடி அகழாய்வு தளத்தில் பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

dhinasakthi news

தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்…

dhinasakthi news

5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் : திமுக எம்.பி. கனிமொழி.

dhinasakthi news

Leave a Comment