2021 ஆப்பிரிக்க கூட்டாளிகள் என்ற ஊடகங்களின் ஒத்துழைப்பு மன்றக் கூட்டம்

2021 ஆப்பிரிக்க கூட்டாளிகள் என்ற ஊடகங்களின் ஒத்துழைப்பு மன்றக்
கூட்டம் 26ஆம் நாள் கென்யாவின் தலைநகரான நைரோபியில் காணொலி
வழியாக நடைபெற்றது. சீன ஊடகக் குழுமத்தின் ஆப்பிரிக்க நிலையத்தால்
நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் சீனா மற்றும் 43 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த
சுமார் நூறு விருந்தினர்கள் பங்கேற்றனர். பரஸ்பர மதிப்பு, ஒத்துழைப்பு மற்றும்
கூட்டு வெற்றி, சீன-ஆப்பிரிக்க ஊடகங்கள் கையோடு கைகோர்த்து
முன்னேறுவதென்ற தலைப்பில் அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து
கொண்டனர்.

சீன ஊடக குழுமத்தின் தலைவர் ஷென்ஹைசியொங் காணொலி வழியாக
அதில் பங்கேற்று உரைநிகழ்த்தினார். எதிர்காலத்தில் ஆப்பிரிக்க செய்தி
ஊடகங்களுடன் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்தை சீன ஊடகக் குழுமம்
தொடர்ந்து ஆழமாக்கி சவால்களைக் கூட்டாக சமாளித்து மேலும் நெருங்கிய
சீன-ஆப்பிரிக்க பொது சமூகத்தைக் கட்டியமைக்கப் போவதாக அவர்
தெரிவித்தார்.

மேலும் சீன ஊடக குழுமம்ஆப்பிரிக்காவின் 36 முக்கிய செய்தி
ஊடகங்களுடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பொறுப்புணர்வுடன் பொதுவான தகவல்களைப் பரப்பி, சீன – ஆப்பிரிக்க
ஊடகங்களின் செல்வாக்கினை மேம்படுத்துவதை ஆக்கப்பூர்வமாக
முன்னெடுத்து, எண்ணியல் மயமாக்கத்தில் உள்ள இடைவெளிப்
பிரச்சினையைக் கூட்டாக சமாளிக்க வேண்டுமென இவ்வறிக்கையில்
வேண்டுகோள் விடுக்கப்பட்டது.