2021தொடரவல்ல வளர்ச்சிக் கருத்தரங்கு துவக்கம்

2021ஆம் ஆண்டுக்கான தொடரவல்ல வளர்ச்சிக் கருத்தரங்குக் கூட்டம் 26ஆம்
நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இக்கருத்தரங்கில், 2030ஆம் ஆண்டுக்கான
தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலைச் சீனா நடைமுறைப்படுத்துவதென்ற
அறிக்கை வெளியிடப்பட்டது.
2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் வறுமை ஒழிப்பு இலக்கைச் சீனா
திட்டமிட்டப்படி நிறைவேற்றியது. 2030ஆம் ஆண்டின் வறுமை ஒழிப்பு
இலக்கை 10ஆண்டுகளுக்கு முன்கூட்டியே சீனா நனவாக்கியது
இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்பில் சீனாவின்
நடைமுறைகள் மற்றும் அனுபவங்கள், எதிர்காலத்தில் பொது செழிப்பை எப்படி
தொடர்ந்து முன்னேற்றுவது போன்ற அம்சங்களில் கருத்தரங்கில் பங்கேற்ற
விருந்தினர்கள் பெரும் கவனம் செலுத்தியுள்ளனர்.
காலநிலை மாற்றத்தின் சமாளிப்பில் சீனா பார்பன் வெளியேற்றம் குறையக்
கூடிய பசுமையான வளர்ச்சி முறை மாற்றுவதை விரைவுபடுத்தி வருகிறது.
காலநிலை மாற்றம் குறித்த ஐ.நாவின் கட்டுக்கோப்பு ஒப்பந்தத்தையும் பாரிஸ்
உடன்படிக்கையையும் சீனா உறுதியாக நடைமுறைப்படுத்தியுள்ளது. மேலும்,
உலகக் காலநிலை மேம்பாட்டில் சீனா ஆக்கப்பூர்வமாக பங்கேற்று
பங்களிப்பை மேலும் உயர்த்தி வருகிறது.
மேலும், கரோனா தடுப்பு மற்றும் உலக சுகாதார நிர்வாகம் பற்றிய
கருத்தரங்கில் விருந்தினர்கள் ஆக்கப்பூர்மான விவாம் மேற்கொண்டனர்.
அப்போது, கரோனா தடுப்பு தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பில் சீனா
ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்ற வல்லரசின் பொறுப்புணர்வு
வெளிக்காட்டப்பட்டது. சீனாவின் சாதனை உலகத்தின் கரோனா தடுப்புக்கு
மேலதிக நம்பிக்கையைக் கொண்டு வந்ததாக சர்வதேச விருந்தினர்கள் பலர்
கருத்து தெரிவித்தனர்.