13ஆவது ஆசிய-ஐரோப்பிய தலைலர்களின் உச்சிமாநாட்டில் லீக்கெச்சியாங் உரை

சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் 25ஆம் நாள் 13ஆவது ஆசிய-ஐரோப்பிய தலைலர்களின் உச்சிமாநாட்டில் காணொளி வழியாக உரைநிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், பலதரப்புவாதத்தை வலுப்படுத்தி, கூட்டு வளர்ச்சியைத் தூண்டுதல் என்ற நடப்பு உச்சிமாநாட்டின் தலைப்பு, நடைமுறையில் ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பலதரப்புவாதத்தில் ஊன்றி நிற்பது, உலகின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்கும் சரியான தேர்வாகும் என்று தெரிவித்தார்.

இவ்வுச்சிமாநட்டில் பங்கெடுத்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உரை நிகழ்த்திய போது, நோய் பரவி வரும் நிலையில், பல்வேறு தரப்புகளும், ஆசிய-ஐரோப்பிய கூட்டாளியுறவை ஆழமாக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.