20 ஓவர் கிரிக்கெட் போட்டியின்போது வாந்தி எடுத்த வங்கதேச அணி வீரர்கள்

20 ஓவர் கிரிக்கெட் போட்டியின்போது வாந்தி எடுத்த வங்கதேச அணி வீரர்கள்

20 ஓவர் கிரிக்கெட் போட்டியின்போது வங்கதேச அணி வீரர்கள் 2 பேர், மோசமான சூழல் காரணமாக வாந்தி எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி

டெல்லியில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா, வங்காள தேசம் அணிகள் இடையே முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அப்போது பீல்டிங் செய்த வங்காளதேச வீரர்கள் சவுமியா சர்க்காரும், இன்னொரு வீரரும் மோசமான சூழல் காரணமாக வாந்தி எடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இதை இஎஸ்பிஎன்.கிரிக்இன்போ இணையதளமும் உறுதி செய்துள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )