பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம்

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம்

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
மெல்போர்ன்,

10 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் மெல்போர்னில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், தொடர்ந்து வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறிய இந்திய அணியும், இதுவரை வெற்றி எதையும் பெறாத இலங்கை அணியும் மோதின.

இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. நிர்ணயிக்கப்பட்ட 20 – ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய பெண்கள் அணி, 14.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விளையாடிய 4- லீக் போட்டிகளிலும் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணி, 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )