இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் : முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 63 ரன்கள் சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் : முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 63 ரன்கள் சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 63 ரன்கள் சேர்த்துள்ளது.
கிறைஸ்ட்சர்ச்,

இந்தியா- நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட் சர்ச் நகரில் இன்று தொடங்கியது. 2-டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால், தொடரை சமன் செய்ய கட்டாயம் வென்றே தீர வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி இந்தப் போட்டியை எதிர் கொண்டது.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் இந்திய அணியை பேட் செய்யுமாறு பணித்தது. இதன்படி, முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணி தடுமாற்றம் கண்டது. 63 ஓவர்கள் தாக்குப்படித்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை சேர்த்துள்ளது. டாம் லாதம் 27 ரன்களுடனும் டாம் பிளண்டெல் 29 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )