2-வது காலாண்டு ஜிடிபி: பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவு

2-வது காலாண்டு ஜிடிபி: பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவு

ஜிடிபி எனப்படும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த 2-வது காலாண்டு புள்ளி விவரங்கள் இன்று வெளியாகும் நிலையில் அதன் தாக்கத்தால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் காலாண்டு அறிக்கையில் அவற்றின் வர்த்தகம் நம்பிக்கை அளிக்கும் வகையில் காணப்படுகிறது. இதன் தாக்கத்தால் பங்குச்சந்தையில் இந்த மாதத்தின் தொடக்கம் முதல் ஏற்றம் காணப்பட்டது.

குறிப்பாக வங்கித்துறை பங்குகள் அதிகம் ஏற்றம் கண்டன. பிற நிறுவனங்களின் பங்குகளும் உயர்வடைந்தன.

இந்தநிலையில் ஜிடிபி எனப்படும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த 2-வது காலாண்டு புள்ளி விவரங்கள் இன்று வெளியாகவுள்ளன. இதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. வங்கிகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைச் சார்ந்த பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் வரை சரிவடைந்தது. பிற்பகல் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 40,743 புள்ளிகளாக உள்ளது. நிப்டி 100 புள்ளிகள் வரை சரிந்து 12,046 புள்ளிகளாக வர்த்தகமானது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )