ஹாங்காங்கில் பங்கு வெளியீடு: ரூ. 1 லட்சம் கோடி திரட்ட அலிபாபா இலக்கு

ஹாங்காங்கில் பங்கு வெளியீடு: ரூ. 1 லட்சம் கோடி திரட்ட அலிபாபா இலக்கு

ஹாங்காங்

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதன் மூலம் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு நாடுகளிலும் ஆன்லைன் வர்த்தகத்தை விரிவாக்கி வரும் சீனாவின் அலிபாபா ஏற்கெனவே பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனம். நியூயார்க் உட்பட பல நாடுகளிலும் உள்ள பங்குச்சந்தைகளில் அலிபாபா தனது பங்குகளை கொண்டுள்ளது.

ஹாங்காங் பங்குச்சந்தையிலும் அலிபாபா நிறுவனம் ஐபிஓ வெளியிட்டுள்ளது. ஹாங்காங் பங்குச்சந்தையில் பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட அலிபாபா திட்டமிட்டுள்ளது.

இந்த பங்கு வெளியீட்டின் மூலம் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட வாய்ப்பு இருப்பதாக ப்ளூம் பெர்க் உள்ளிட்ட பங்குச்சந்தை ஆய்வு நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த பங்கு வெளியீடு ஹாங்காங்கில் 9 ஆண்டுகளில் இல்லாத ஒன்றாக இருக்கும் என நம்பப்படுகிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )