ரூ.4,600 கோடிக்கு பில்கேட்ஸ் வாங்கிய ‘சூப்பர்’ படகு

ரூ.4,600 கோடிக்கு பில்கேட்ஸ் வாங்கிய ‘சூப்பர்’ படகு

உலகின் முன்னணி கோடீஸ்வரரான பில்கேட்ஸ் ரூ.4,600 கோடிக்குப் புதிதாக அதிநவீன படகு ஒன்றை வாங்கியுள்ளார்.

பயண விரும்பியான பில்கேட்ஸ் கோடை காலங்களில் படகுகளில் சுற்றுலா மேற்கொள்வது வழக்கம். அவர் இதுவரை வாடகைக்கு படகுகளை எடுத்து பயணித்துவந்தார். இந்நிலையில் தற்போது சொந்தமாகவே ஒரு சூப்பர்யாக்ட் படகை வாங்கியிருக்கிறார்.

இது திரவ ஹைட்ரஜனில் இயங்கும் முதல் படகாகும். இதில்ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இணைந்து படகை இயக்குவதற்கான மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இதிலிருந்து நீர் மட்டுமே வெளியேற்றப்படும். இதுவரை கார், பேருந்து போன்றவற்றில் மட்டுமே காணப்பட்டுவந்த இந்த திரவ ஹைட்ரஜன் இன்ஜின் தற்போது படகுகளிலும்பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் படகை இவர் 644 மில்லியன் டாலருக்கு வாங்கிஇருக்கிறார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.4,600 கோடி ஆகும்.

இந்தப் படகு 370 அடி நீளம் கொண்டது. ஐந்து அடுக்குகள் கொண்ட இந்தப் படகில் 14 விருந்தினர்கள் தங்கும் அளவுக்கு இடவசதி உண்டு. 31 பணியாட்கள் இந்தப் படகில் உள்ளனர். ஜிம்,மசாஜ் பார்லர், யோகா ஸ்டூடியோ, கேஸ்கேடிங் நீச்சல்குளம் என பல வசதிகள் உள்ளன.

இந்தப் படகு டச்சு மரைன் ஆர்க்கிடெக்ட் இன்ஜினியர்களால் உருவாக்கப்பட்டது. இது கடந்த வருடம் நடந்த மொனாகோ படகு கண்காட்சியில் இடம்பெற்று அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )