பெட்ரோல், டீசல் விற்பனை வரலாறு காணாத  சரிவு விமான எரிபொருள் விற்பனை 94% சரிவு

பெட்ரோல், டீசல் விற்பனை வரலாறு காணாத சரிவு விமான எரிபொருள் விற்பனை 94% சரிவு

எல்.பி.ஜி என்கிற சமையல் எரிவாயு தவிர மற்ற பெட்ரோலியப் பொருட்களான பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றுக்கான தேவை கடுமையாகச் சரிவு கண்டுள்ளதை அடுத்து ஏப்ரலில் இதன் விற்பனை பெரிய அளவில் அடி வாங்கியுள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை பெட்ரோல் விற்பனை 64% டீசல் விற்பனை 61% சரிவு கண்டுள்ளது. ஏடிஎஃப் என்று அழைக்கப்படும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் என்ற விமான எரிபொருள் விற்பனை 94% சரிவு கண்டுள்ளது.

சமையல் எரிவாய் சிலிண்டர் விற்பனை மட்டும் இந்த 15 நாட்களில் 21% அதிகரித்துள்ளது. மொத்தமாக பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை சரிவு 50% ஆக உள்ளது.

இது மூன்று பெட்ரோலிய விற்பனை பொதுத்துறை நிறுவனங்களின் தரவுகளின் அடிப்படையிலாகும்.

இதுவரையில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விற்பனைகள் சரிவு கண்டுள்ளன. 2019 ஏப்ரலில் இந்தியா 2.4 மில்லியன் டன்கள் பெட்ரோ மற்றும் 7.3 மில்லியன் டன்கள் டீசல் நுகர்வு செய்துள்ளது, இதே காலத்தில் 645000 டன்கள் ஏடிஎஃப் பயன்படுத்தியுள்ளது.

மார்ச் 2020-ல் பெட்ரோலியப் பொருட்கள் நுகர்வு 17.79% சரிவு கண்டு 16.8 மில்லியன் டன்களாகக் குறைந்தது. டீசல் இதே மாதத்தில் 24.23% சரிவு கண்டு 5.65 மில்லியன் டன்களாகக் குறைந்தது.

நாட்டில் வரலாறு காணாத டீசல் நுகர்வு சரிவு இதுதான்

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )