நிலைமின்னியல் கிருமிநாசினி தெளிப்பு தொழில்நுட்பம்: வர்த்தக ரீதியில் தயாரிக்க அனுமதி

நிலைமின்னியல் கிருமிநாசினி தெளிப்பு தொழில்நுட்பம்: வர்த்தக ரீதியில் தயாரிக்க அனுமதி

கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்ப்டடுள்ள புதிய தொழில்நுட்பமான நிலைமின்னியல் கிருமிநாசினி தெளிப்புத் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், சிறப்பான முறையில் கிருமிநாசினி தெளிக்கவும், சுகாதாரத்தைப் பேணவுமாக புத்தாக்கத் தொழில்நுட்பத்தை சண்டிகரில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமத்தின் மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு உருவாக்கியுள்ளது.

நிலைமின்னியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நிலைமின்னியல் கிருமிநாசினித் தெளிப்பு இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நுண்உயிர்கள் மற்றும் வைரஸ்களை அழிப்பதற்காக 10 முதல் 20 மைக்ரோமீட்டர் வரை ஒரே சீரான அளவிலும், சிறப்பான துளிகளாகவும் கிருமிநாசினியை இது தெளிக்க வைக்கிறது.

இதனை வர்த்தகமயமாக்கவும், மிகப்பெரும் அளவில் உற்பத்திசெய்யவும் இந்தத் தொழில்நுட்பத்தை நாக்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரைட் வாட்டர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு CSIR-CSIO வழங்கியுள்ளது. கரோனா வைரஸ் மற்றும் நோய்க்கிருமிகள் பரவுவதை இந்தத் தொழில்நுட்பம் சிறப்பான முறையில் தடுப்பதுடன் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக CSIR-CSIO விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )