டிசிஎஸ் நிறுவனத்தில் புதிய நியமனங்கள் குறைப்பு

டிசிஎஸ் நிறுவனத்தில் புதிய நியமனங்கள் குறைப்பு

டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய பணி நியமனங்கள் டிசம்பர் மாதம் முடிந்த நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலண்டில் சரிந்துள்ளது. மூன்றாம் காலாண்டு அளவில், டிசிஎஸ்நிறுவனத்தில் மொத்த அளவாக 4,46,475 ஊழியர்கள் உள்ளனர். முந்தைய காலாண்டில் அந்த எண்ணிக்கை 4,50,738-ஆக இருந்தது.

கடந்த 10 காலாண்டுகளில் நடப்பு நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில்தான் முதன் முறையாகப் புதிய நியமனங்கள் குறைந்துள்ளன. இறுதியாக 2017-18-ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் புதிய நியமனம் குறைந்தது. அதன்முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2017-18 முதல் காலாண்டில் ஊழியர்கள் எண்ணிக்கை 1,414குறைந்து 3,85,809 ஆக இருந்தது.

இதுதொடர்பாக டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வி.ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘செப்டம்பர் மாதம் முடிந்தநடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அதிக அளவில் ஆட்களை வேலைக்கு எடுத்தோம். அதை ஈடு செய்யும் விதமாகவே டிசம்பர் காலாண்டில் புதிய நியமனங்களைக் குறைத்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

செப்டம்பர் காலாண்டில் 14,000 அளவிலும், ஜூன் காலாண்டில் 12,000 அளவிலும் புதியநியமனங்களை டிசிஎஸ் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இன்ஃபோசிஸ் நிறுவனம் மூன்றாம் காலாண்டில் நிகர அளவாக 6,968 பேர்களையும் விப்ரோ நிறுவனம் 5,865 பேர்களையும் புதிதாக வேலைக்கு எடுத்துள்ளன.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )