ஜிஎஸ்டி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 30-ம் தேதியாக நீட்டிப்பு

ஜிஎஸ்டி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 30-ம் தேதியாக நீட்டிப்பு

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூன் 30-ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் தொழில்பாதிப்பு, பொருளாதார சிக்கல் ஏற்பட்டு வரும் நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதன்படி நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 31-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதியாக நீட்டித்து அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுபோலவே ஜிஎஸ்டி வரி தொடர்பான அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூன் 30-ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜிஎஸ்டி வரி தாக்கல் தேதி குறிப்பிட்டு அறிவிக்கப்படும். 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு கால தாமத கட்டணம், வட்டி என அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூன் 30-ம் தேதியா நீட்டிக்கப்படுகிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )